சென்னை: நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும், மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 14 மாணவர் அமைப்பை சார்ந்தவர்கள் ஒருங்கிணைந்து நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் மீது ஒன்றிய அரசு நடத்திய கடுமையான தாக்குதலை தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அளவில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் வருகின்ற 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிகப்பெரிய பேரணி நடைபெற உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி போராடக்கூடிய மாணவர்கள் மீது டெல்லி போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து இன்று ஒரு நாள் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
