கனடாவுக்கு 50 சதவீத கூடுதல் வரி: டிரம்ப்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பலதரப்பட்ட பொருட்கள் மீது 50% கூடுதல் வரியை அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு உலக நாடுகள் பலவற்றுக்கும் வரிகளை அதிகம் விதித்துள்ளார். தற்போது கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் மீது 50% கூடுதல் வரியை அதிரடியாக விதித்துள்ளார்.

கனடா அமெரிக்க கார்கள், பால் பொருட்கள் மற்றும் மதுபானங்களுக்கு எதிராக நியாயமற்ற முறையில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இந்த 50% புதிய வரிகள் 30 நாட்களில் அமலுக்கு வரவுள்ளன.

Related Stories: