- மம்தா பானர்ஜி
- காங்கிரஸ்
- பாஜக
- கொல்கத்தா
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- கம்யூனிஸ்டுகள்
- பாரதிய ஜனதா கட்சி
- பாஜக அரசு
- மேற்கு வங்கம்
- திரிணாமூல் காங்கிரஸ்
கொல்கத்தா: மேற்கு வங்க பாஜ அரசை எதிர்த்துப் போராட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இந்தியா கூட்டணியின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புவதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருந்த போதிலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியின் பரம வைரிகளாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இருக்கின்றன. இந்த நிலையில், பாஜவை எதிர்க்க அந்த கட்சிகளுக்கு மம்தா தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரசின் வருடாந்திர தியாகிகள் தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மாஜி முதல்வர் மம்தா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் பாஜவை எதிர்த்துப் போராட அனைவரும் இந்தியா அணியின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு எந்த அகந்தையும் இல்லை. மற்றவர்களும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாகப் போராட வேண்டும்.
திரிணாமுல் காங்கிரஸை பலவீனப்படுத்த முதல்வர் சுவேந்து அதிகாரி மாநில அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார். எனது கட்சியில் அவர் இருந்த பத்தாண்டு காலத்தில் செய்த செயல்களை என்னால் அம்பலப்படுத்த முடியும். உங்கள் முகமூடியை நான் கிழித்தெறிவேன்,மத்தியில் பாஜக தோற்கடிக்கப்பட்டால், இங்கேயும் அரசு ஆட்டம் காணும்.
எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதற்காக புலனாய்வு அமைப்புகளும் காவல்துறையும் பயன்படுத்தப்படுவதாகவும், மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைத்ததிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கிட்டத்தட்ட 14,000 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
