×

இளைஞர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு வேதனையான சூழலில் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம்: காங். தலைவர் கார்கே வேண்டுகோள்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில்,‘‘நேற்று(திங்கட்கிழமை) தேசம், தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் அமைதியான ஜனநாயகப் போராட்டத்தை அரசு ஒடுக்கியதை பார்த்தது. நீதி கோரிய மாணவர்களின் குரல்கள் பதில்களுக்கு மாறாக வன்முறையால் நசுக்கப்பட்டன.

ஜனநாயகத்தின் தாய் தனது சிறு குழந்தைகளை இப்படி நடத்துவதில்லை. இந்த வேதனையான சூழ்நிலையில் எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்ற முடிவு செய்துள்ளேன். இன்று கொண்டாட்டத்துக்கான நாள் அல்ல. ஆனால் இது பொறுப்புக்கூறலைத் தேடுவதற்கும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்குமான நாள் ஆகும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Congress ,Kharge ,New Delhi ,Congress party ,Mallikarjun Kharge ,
× RELATED மாணவர்கள் மீது போலீஸ் தடியடியை...