×

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு அரியானா எல்லையை மூடியதால் பஞ்சாப் விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

அம்பாலா: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து டெல்லியில் உள்ள கிசான் காட் பகுதியில் நாட்டைக் காப்போம் முன்னணி அமைப்பின் சார்பில் நாள் முழுவதும் நடைபெறும் விவசாயிகள் மகா கூட்டம் (கிசான் மகாபஞ்சாயத்து) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பேருந்துகள் மூலமாக டெல்லிக்கு செல்வதற்கு தங்களது அமைப்புக்களின் கொடியை ஏந்தியவாறு நூற்றுக்கணக்கனா விவசாயிகள் ஷம்பு எல்லையில் திரண்டனர்.

ஆனால் அவர்கள் அரியானாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பஞ்சாப் மற்றும் அரியானா எல்லைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இரு்நதது. அரியானா நுழைவுப் பகுதியில் உள்ள காகர் ஆற்றின் பாலத்தின் மீது ஒன்றோடொன்று சங்கிலியால் இணைக்கப்பட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. அம்பாலா மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் தடை உத்தரவுகளையும் பிறப்பித்தது.

பஞ்சாப், அரியானா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு செல்ல இருந்தனர். விவசாயிகளின் வாகன அணிவகுப்பு குருத்வாரா ஸ்ரீபதேஹ்கர் சாஹியில் இருந்து ஷம்பு எல்லை நோக்கி புறப்பட்டது.

ஷஹாபாத் மற்றும் கர்னால் ஆகிய இடங்களில் ஏராளமான விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகள் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு தாமதங்கள் மற்றும் சிரமங்களை தவிர்ப்பதற்கு அரியானா காவல்துறை பயணிகளுக்கான பிரத்யேக போக்குவரத்து ஆலோசனையை வெளியிட்டது.

Tags : Punjab ,Haryana border ,India ,US ,Kisan Mahapanchayat ,National Save the Country Front ,Delhi ,Kisan Ghat ,Punjab… ,
× RELATED மாணவர்கள் மீது போலீஸ் தடியடியை...