×

ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் காலி பதவிகளை நிரப்ப இன்று ஆலோசனை

அயோத்தி: அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் காலியாக உள்ள அறங்காவலர் பதவிகளை நிரப்புவது குறித்து இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. உத்தரப்பிரதேசம் அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை முறைகேடு குறித்து கடந்த மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்கொடை புகாரை அடுத்து பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். கடந்த 6ம் தேதி நடந்த ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் கூட்டத்தில் இந்த ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டது. இந்நிலையில் அறக்கட்டளையின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இது குறித்து அறக்கட்டளையின் உறுப்பினரான சுவாமி பரமானந்த கிரி கூறுகையில்,‘‘அறக்கட்டளை கூட்டத்தில் காலியாக உள்ள அறங்காவர் பதவிகளை நிரப்புவது குறி த்து விவாதிக்கப்படும்.

வேறு என்ன விவகாரங்கள் எழுகின்றது என்பது கூட்டத்தின்போது தான் தெரியவரும். அவை தேவைக்கேற்ப விவாதிக்கப்படும். நன்கொடை முறைகேடு தொடர்பான சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கை வந்த பின்னர் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படலாம். காலியாக உள்ள அறங்காவலர் பதவிகளை நிரப்புவது குறித்து எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்” என்றார்.

Tags : Shri Ram Janmabhoomi Trust ,Ayodhya ,Ayodhya Shri Ram Janmabhoomi Trust ,Uttar Pradesh ,Ayodhya Ram temple ,
× RELATED மாணவர்கள் மீது போலீஸ் தடியடியை...