அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு முதன்மை தேர்வு வரும் 27ம் தேதி தொடக்கம்: ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதன்மை தேர்வு வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு உதவி வழக்கு நடத்துநர்(கிரேடு 2) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 15.2.2026 முற்பகலில் நடைபெற்றது. இத்தேர்விற்கான முதன்மைத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) வருகிற 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை முற்பகலில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: