ஆலந்தூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் எஸ்.சௌந்தரராஜன் அறிக்கை; கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வணிகரான சபரிவர்மன் என்பவர் அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைக் காவலர்கள் மற்றும் சிறை கைதிகளால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சபரிவர்மனின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், குடும்பத்தில் எதிர்கால பாதுகாப்பிற்கு தேவையான தகுந்த நிதி உதவியை உடனடியாக வழங்கிட வேண்டும். ஏழை, எளிய மக்களின் நலன்காக்கும் அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியையும் வாழ்வாதாரத்தையும் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக முதல்வர் ஜோசப் விஜய்க்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று சபரிவர்மன் குடும்பத்தினரின் எதிர்கால வாழ்வை நல்ல முறையில் எதிர் கொள்ளும் வகையில் நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிரந்தரமாக தங்குவதற்கு அரசு வீடு ஆகியவற்றை ஒதுக்கி ஆணை அந்த குடும்பத்துக்கு பெரும் ஒளியாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரை துடைத்து அவர்களுக்கு மறுவாழ்வு தந்துள்ள தங்களின் இந்த உன்னத நடவடிக்கைக்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
