சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராயன்’ சிறந்த படமாக தேர்வு; 72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழ் திரையுலகிற்கு 10 விருதுகள் அறிவிப்பு

புதுடெல்லி: தமிழில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ என்ற படம், சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்த தனுஷ், சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது பெறுகிறார். ‘அமரன்’ படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான விருதை ராஜ்குமார் பெரியசாமியும், சிறந்த பின்னணி இசைக்கான விருதை ஜி.வி.பிரகாஷ் குமாரும் பெறுகின்றனர். மற்றும் ‘மகாராஜா’, ‘மெய்யழகன்’ உள்பட தமிழ்ப் படங்களுக்கு மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளன.

கடந்த 2024ல் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள், நேற்று மாலை 5.30 மணியளவில், டெல்லியிலுள்ள தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. நான்-பியூச்சர் பிலிம் பிரிவில் ஆவணப்படங்கள், குறும்படங்கள், அனிமேஷன் ஆகிய பிரிவுகளுக்கு இயக்குனர் இ.வி.கணேஷ் பாபு, தமிழ்நாட்டில் இருந்து சென்று ஜூரியாக செயல்பட்டார். முழுநீள திரைப்படங்களுக்கான பிரிவில் கலா மாஸ்டர் தமிழகத்தில் இருந்து சென்று செயல்பட்டார். இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மொழிகளை சேர்ந்த 400 படங்கள் பார்வையிடப்பட்டு, அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது. தேர்வுக்குழு தலைவராக ஜெயராஜ் செயல்பட்டார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது 2 நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. மலையாளத்தில் வெளியான ‘பிரம்மயுகம்’ என்ற படத்தில் நடித்த மம்மூட்டிக்கும், ‘சந்து சாம்பியன்’ என்ற இந்திப் படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யனுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இது மம்மூட்டி பெறும் 4வது தேசிய விருதாகும். சிறந்த நடிகைக்கான விருது, இந்தியில் வெளியான ‘ஆர்ட்டிகிள் 370’ என்ற படத்தில் நடித்த யாமி கவுதமுக்கு கிடைத்துள்ளது.
தமிழ்ப் படவுலகிற்கு 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. ‘அமரன்’ படத்துக்கு 3 விருதுகள், ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு 2 விருதுகள், ‘மகாராஜா’ படத்துக்கு 2 விருதுகள் மற்றும் ‘ராயன்’, ‘மெய்யழகன்’, ‘ப்ளூ’ (ஆவணப்படம்) ஆகிய படங்களுக்கு தலா 1 விருது என்று, மொத்தம் 10 விருதுகள் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்க, தனுஷ் எழுதி இயக்கி நடித்த ‘ராயன்’ என்ற படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சிறந்த தேசிய நலன், சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திரைப்படம் என்று தேர்வு செய்யப்பட்ட ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்துக்கும் மற்றும் இதில் ஹீரோவாக நடித்திருந்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதும் கிடைத்துள்ளது.

ஏற்கனவே ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நடிப்புக்காகவும் மற்றும் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ ஆகிய படங்களுக்கு தயாரிப்பாளருக்காகவும் தனுஷ் தேசிய விருது பெற்றுள்ளார். சிறந்த இயக்குனர்: ராஜ்குமார் பெரியசாமி (அமரன்). சிறந்த துணை நடிகை: சாச்சனா நமிதாஸ் (மகாராஜா). ஸ்பெஷல் ஜூரி விருது: கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ என்ற படத்தின் சிறந்த ஒலிக்கலவைக்காக டி.எஸ்.ஹரிஹரசுதன். சிறந்த இசை அமைப்பாளர் பிரிவில் சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் (அமரன்). ஏற்கனவே ‘சூரரைப்போற்று’, ‘வாத்தி’ ஆகிய திரைப்படங்களுக்காக அவர் தேசிய விருதுகள் பெற்றிருந்தார். சிறந்த படத்தொகுப்பு: ஆர்.கலைவாணன் (அமரன்).

சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்: அனல் அரசு (மகாராஜா). ‘ப்ளூ’ என்ற ஆவணப்படம். மற்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிப் படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்தும், அதில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது.

Related Stories: