×

பெற்றோரை தாக்கி சிறுமி கடத்தல்: திருத்தணியில் புகார் பெற மறுப்பு

திருத்தணி: பெற்றோரை தாக்கி சிறுமியை கடத்தல் சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றவர்களிடம் புகார் பெற மறுத்து அனுப்பி சம்பவம் திருத்தணியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிப்பட்டு அடுத்த புண்ணியம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் கூலித்தொழிலாளி. மகள் சந்தியா(16) என்ற சிறுமியை நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் நகரி பகுதியைச் சேர்ந்த 8 பேர் அத்துமீறி வீட்டில் புகுந்து ஆனந்தன் அவரது மனைவி லட்சுமியை தாக்கி அவர்களின் மகளை கடத்தி சென்று விட்டதாக கூறி திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்திருந்தனர்.

காவல் நிலையத்தில் ஆய்வாளர் மலர் இல்லாத நிலையில் தலைமை காவலர் ஒருவர் மட்டும் பணியில் இருந்தார். அவரிடம் புகார் அளிக்க சென்ற லட்சுமியை நீண்ட நேரம் காக்க வைத்து எந்த ஊரு என்று கேட்டு பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இங்கு புகார் கொடுக்க கூடாது என்று தெரிவித்தார். சிறுமியை கடத்தியதால் இங்கு புகார் அளிக்க வந்தோம் என்று கூறியும் பொருட்படுத்தாமல் புகார் பெற மறுத்து அனுப்பிவிட்டனர்.

வேறு வழியின்றி தம்பதிகள் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினமும் பாலியல் மற்றும் குடும்ப பிரச்னை தொடர்பான புகார்கள் வந்தாலும் ஆய்வாளர் முறையாக புகார்கள் பெற்று விசாரிக்காமல் காலம் கடத்தி காவல் நிலையத்தில் பஞ்சாயத்து பேசி அனுப்பவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது. பாலியல் புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்தனர்

Tags : Trithani ,All ,Women Police Station ,Anandan ,Punniyam ,
× RELATED மசினகுடியில் உள்ள கிராம சாலைகளில்...