×

பெரம்பலூர் அருகே பள்ளி வளாகத்தில் காலை உணவு திட்ட பணியாளர் தற்கொலை

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா ஜெமீன் ஆத்தூர் கிராமத்தில் காலை உணவு திட்ட பணியாளர் பள்ளி வளாகத்தினுள் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஜெமீன் ஆத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னராசா மனைவி திவ்யா(30). இவர் ஜெமீன் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காலை உணவு திட்டத்தின் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

அவரது கணவர் சின்னராசா என்பவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பணிபுரியும் பள்ளி வளாகத்தில் உள்ள உணவக காப்பறையில் உள்ள மின் விசிறி ஊக்கில் சுடிதார் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Perambalur ,BATALUR ,ALATHUR TALUKA ,JAMEEN ,OF ,ATHUR ,Sinnarasa ,Divya ,Perambalur District Alathur Taluga Jemeen Atur South Street ,
× RELATED மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட...