கோவை மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலரை தாக்க முயற்சி: மாணிக்கம் தாகூர் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கிய போது, காங்கிரசை சேர்ந்த காயத்ரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 4 மாமன்ற உறுப்பினர்கள் செம்மொழி பூங்கா திட்டப் பணிகளில் ரூ.40 கோடி வரை முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு கூறினார்கள். பேச முயன்றபோது, பெண் என்றும் பாராமல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் மீது திமுக கவுன்சிலர்கள் தாக்க முற்பட்டார்கள்.

இந்நிலையில் மேயர், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மற்றும் 4 கம்யூனிஸ்ட் உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்வதாக அறிவித்துவிட்டு சபையை ஒத்தி வைத்தார். பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரியை மட்டும் இரண்டு மாதத்திற்கு இடைநீக்கம் செய்து அறிவித்தார். கோவை மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற ஜனநாயக விரோதச் செயலை காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: