பெரியபாளையத்தில் பரபரப்பு பவானி அம்மன் கோயிலில்ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இவர்கள் கார், பஸ், பைக்குகளில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்தநிலையில் தற்போது பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. தற்போது கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் பக்தர்கள் வருகின்ற வாகனங்கள் செல்ல கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.கோவில் பகுதியில் உள்ள நெல்வாய் கிராம மருத்துவமனை சாலையில் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

மேலும் கடைகள் அமைத்துள்ளதாலும் மேலும் நெரிசல் ஏற்பட்டு தவித்தனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்த நிலையில், நெடுஞ்சாலை துறை மற்றும் காவல்துறையினர் வந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். பொக்லைன் எந்திரம் மூலம் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அதிரடியாக அகற்றினர். ‘’ சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Related Stories: