ஊட்டி, ஜூலை 18: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை இல்லாத நபர்களுக்கு இன்று (18ம் தேதி), 25ம் தேதி, ஆகஸ்டு மாதம் 1, 8 மற்றும் 16ம் தேதிகளில் சிறப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் இல்லாத பழங்குடியின மக்களுக்கு கூடலூர் வட்டத்திற்கு கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. எனவே இந்த முகாமில் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
