ஊட்டி,ஜூலை17: ஊட்டி அருகேயுள்ள தொட்பெட்டா பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான ேதயிலை பூங்கா உள்ளது. இந்த பூங்கா கடந்த சில ஆண்டுகள் முன் வரை தேயிலை தோட்டம் மற்றும் பேரிக்காய் தோட்டமாக இருந்தது. அதனை தற்போது பூங்காவாக மாற்றி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வந்துச் செல்லவும், அங்கு விளையாடவும் ஏற்றவாறு புல் மைதானங்கள், விளையாட்டு சாதனங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு பகுதி தேயிலை தோட்டமாக உள்ளது. இதில், ஏராளமான பேரிக்காய் மரங்கள் உள்ளன.
வேலை பூங்காவில் ஆண்டுதோறும் பேரிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டு, ஜாம் தயாரிப்பதற்காக குன்னூர் பழவியல் பண்ணைக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கும் குறைந்த விலையில், பேரிக்காய்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு டன் பேரிக்காய்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக தற்போது 800 கிலோ பேரிக்காய்கள் பழவியல் பண்ணைக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மழை குறைந்ததால் பேரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் மேலும் 700 கிலோ பேரிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்த பேரிக்காய்களும் குன்னூர் பழவியல் பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முறை ஒரு டன் பேரிக்காய்கள் மட்டுமே அறுவடை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கூடுதலாக பேரிக்காய்கள் காய்த்துள்ளன. மேலும், கூடுதலாக இன்னும் 200 கிலோ பேரிக்காய்கள் அறுவடை செய்யவும் வாய்ப்புள்ளதாக உங்க ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் தேயிலை பூங்காவிற்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
