பந்தலூர்,ஜூலை18: பந்தலூரில் அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் தீபக்ராம் தலைமை வகித்தார். செயலாளர் ரகுராமன்,பொருளாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது,ஆண்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து பந்தலூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நெல்லியாளம் நகராட்சி தூய்மை பணியாளர்களின் சேவையைப் பாராட்டி சிறப்பு செய்து கவுரவிக்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
