சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றம், வட்டி விகித ஏற்றத்தாழ்வுகள், புவியியல் அரசியல் பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதாவது கடந்த 11ம் தேதி முதல் நேற்று வரை பவுனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மத்தியில் சற்று ஆறுதலை அளித்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,440க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,180க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,150க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைப்போல் வெள்ளி விலையும் நேற்று முன்தினம் குறைந்த நிலையில் நேற்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5ம் கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.240க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது. இதையடுத்து இன்று சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனையாகிறது.
