சென்னை: தங்கம் விலை நேற்று ரூ.400 குறைந்தது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,600க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,200க்கும் விற்றது.
கடந்த 11ம் தேதி முதல் நேற்று வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இதேபோல நேற்று வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.235க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையானது.
