சென்னை: வாரத்தின் இறுதி நாளான நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,300க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,400க்கும் விற்பனையானது. இதே போல வெள்ளி விலையும் குறைந்தது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
