தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு

 

சென்னை: தங்கம் விலை கடந்த 11ம் தேதி முதல் நேற்று வரை பவுனுக்கு ரூ.1,600 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு மத்தியில் சற்று ஆறுதலை அளித்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,440க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,180க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதைப்போல் வெள்ளி விலையும் நேற்று முன்தினம் குறைந்த நிலையில் நேற்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5ம் கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.240க்கும், ஒரு கிலோ ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது.

Related Stories: