×

கல்வி, தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர்: மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்

 

சென்னை: கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த காமராசருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த காமராசரின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம். மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சை தமிழர் என பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களை செயல்படுத்தியவர். பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர். உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.

காமராசர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது வழியிலான நமது அரசிலும், காமராசர் கல்லூரி மேம்பாட்டு திட்டம், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் சிலை, திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் பெயர் என அவரது புகழ்போற்றும் அரசை நடத்தினோம். தலைமுறைகள் தழைக்க கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : Kamaraj ,M.K. Stalin ,Chennai ,DMK ,Tamil Nadu… ,
× RELATED கிருஷ்ணகிரியில் நில அதிர்வு