×

மறைமலை அடிகள் பிறந்தநாள் முதல்வர் விஜய் வாழ்த்து

 

சென்னை: மறைமலை அடிகள் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தமிழறிஞர் மறைமலை அடிகள் பிறந்தநாளில் அவருக்கு எனது தனித்தமிழ் புகழ் வணக்கங்கள். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த போதிலும், தமிழின் இயல்பும் இனிமையும் குன்றாமல் வளர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், தமிழில் பிறமொழி கலப்பின்றி எழுதும் வழக்கத்தை தொடங்கி, தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் மறைமலை அடிகள்.

தனது மொழிப்பற்று, தமிழார்வம், சிந்தனைகளால் தமிழ்ச் சமூகத்திற்கு என்றும் உந்துசக்தியாக திகழும் மறைமலை அடிகளின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Vijay ,Maraimalai Adigal ,Chennai ,Thani Tamil movement ,
× RELATED கிருஷ்ணகிரியில் நில அதிர்வு