சென்னை: காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காமராஜர் சிலை மற்றும் படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் மற்றும் மாநிலங்களவை எம்.பி.பிரவீன் சக்ரவர்த்தி, அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
