- சென்னை
- சுகாதார அமைச்சர்
- அருண்ராஜ்
- மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம்
- தேசிய மருத்துவ ஆணையம்
- நாமக்கல்
- திருப்பூர்
- திருவள்ளூர்
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம் நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஏற்கனவே உள்ள மருத்துவ இடங்களுடன் தலா 50 இளங்கலை (எம்பிபிஎஸ்) மருத்துவ இடங்களை கூடுதலாக வழங்கியுள்ளது. அதன்படி மாணவர் சேர்க்கைத் திறன் தலா 100ல் இருந்து 150 இடங்களாக உயர்ந்துள்ளன.
மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 36 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 5,200 இடங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநில கலந்தாய்வு செயல்முறையில் இந்த 150 கூடுதல் இடங்களை சுமுகமாக ஒருங்கிணைக்க மருத்துவ கல்வி இயக்ககத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தேசிய மருத்துவ ஆணைய இட ஒதுக்கீட்டுப் பட்டியலை கண்டிப்பாகப் பின்பற்றி நடைபெறும். துவஇவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
