சேலம் அரிசிபாளையம் நிதிஷ் குடல் மருத்துவமனை 10ம் ஆண்டு தொடக்க விழா

ராசிபுரம், மார்ச் 14:சேலம் 4 ரோடு பகுதி அரிசிபாளையத்தில் உள்ள நிதிஷ் குடல் மருத்துவமனையின் 10ம் ஆண்டு தொடக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. தலைமை இயக்குனர் வஜ்ரவேலு தலைமையில், குடல் சிறப்பு நிபுணர் டாக்டர் சிவசங்கர், நோய் குறியியல் நிபுணர் டாக்டர் ஜெயந்தி சிவசங்கர், மருத்துவமனை ஊழியர்கள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதுகுறித்து டாக்டர் சிவசங்கர் கூறும்போது, சென்னை, கோவைக்கு இணையாக உலக தரத்தில் அதிநவீன எண்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி ஒலிம்பஸ் 190 எச்.டி. பரிசோதனை மூலம் ஆரம்ப கட்ட குடல் புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சைகள் மேற்கொள்ள சிறப்பு வசதிகள் இங்கு உள்ளது. கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமான பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை முறைகள், அறுவை சிகிச்சை வசதிகள் மற்றும் எச்.டி. லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை வசதிகள் மற்றும் குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை வசதிகள் அளிக்கப்படுகின்றன. சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில், இந்த மருத்துவமனை அமைந்து உள்ளது என்றார். ...

Related Stories: