ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் வேதாந்தா குழுமத்தின் ஆலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக அந்த குழுமத்தின் தலைவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கானது அந்த தொழிற்சாலையை விற்பதற்கு நிர்பந்திப்பதற்கானவே பதியப்பட்டது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சட்டீஸ்கர் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது வேதாந்தா குழுமம் விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினார்கள். அரசு தரவுகளை மேற்கோள்காட்சி பேசிய எதிர்க்கட்சி தலைவர் சரண் தாஸ் மஹந்த், சக்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா மின் நிலையத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 7 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் மற்றும் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கோ அல்லது கைது நடவடிக்கைகாகவோ அனில் அகர்வாலை போலீசார் நேரில் சந்தித்தார்களா? என்றார். இதனை தொடர்ந்து பேசிய மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான பூபேஷ் பாகல், இனி வரும் காலங்களில் மாநிலத்தில் நிகழும் எந்தவோரு தொழீல்சாலை விபத்துக்கும் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது அரசு வழக்கு பதிவு செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அகர்வால் மீதான வழக்கானது அந்த தொழிற்சாலையை விற்பதற்காக அவரை நிர்பந்திக்கும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். இதனால் சட்டப்பேரவையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதத்தை எழப்பியது. இதற்கு அமைச்சர் அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
