தங்கம் விலையில் அடுத்தடுத்து மாற்றம் காலையில் பவுனுக்கு ரூ.240 குறைந்து, மாலையில் ரூ.800 உயர்ந்தது: நகை வாங்குவோர் குழப்பம்

சென்னை: தங்கம் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, மாலையில் பவுனுக்கு ரூ.800 உயர்ந்தது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை நேற்று காலை குறைந்தது. அதன்படி, காலையில் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 5,760க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த 6ம் தேதி முதல் நேற்று காலை வரை பவுனுக்கு ரூ.3840ம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் நேற்று காலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.

ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், பார் வெள்ளி ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனையானது.
நேற்று மாலையில் தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,320க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,560க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: