யானை வழித்தடங்கள் பற்றி விரைந்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: இறுதி செய்யப்பட்ட 3 யானை வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. யானைகள் வழித்தடங்கள் அறிவிப்பது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையின்படி, ஜவளகிரி-அஞ்செட்டி, பெல்லிக்கல்-ஜவளகிரி உள்பட 3 வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. 41 வழித்தடங்கள் குறித்த அறிக்கையில் மேலும் 12 வழித்தடங்களை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருவதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: