பகிரங்க குதிரை பேரம் நடத்தும் தவெக மீது 356ம் பிரிவு பாயுமா? அதிமுக கேள்வி

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: தவெக ஆட்சியின் பெரும்பான்மை ஸ்திரத்தன்மையை செயற்கையாக உருவாக்குவதற்கு பகிரங்கமாக குதிரை பேரத்தில் விஜய் ஈடுபட்டு வருவது, தமிழ்நாட்டு மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர், குதிரை பேரத்தில் ஈடுபடக்கூடாது என உறுதி வாங்கியதை, இப்போது விஜய் காற்றிலே பறக்க விட்டாரா? தற்போது விஜய் பகிரங்கமாக நடத்தி வருகின்ற குதிரை பேரம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சிதைத்திருக்கிறது.

தவெ‌க அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை இந்திய அரசின் சட்டப்படி தடுத்து நிறுத்தும் பொறுப்பும், கடமையும் ஆளுநருக்கு இருக்கிறது. இந்த ஆட்சியின் ஜனநாயக விரோத, ஜனநாயக படுகொலைக்கான அந்த விவரங்களை உள்துறைக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு, கடமை இருக்கிறது. இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 356 பிரிவின் வலிமை என்ன? அதனுடைய விளைவு என்ன என்பதையும் விஜய் அறிந்திருப்பார். இந்த குதிரை பேரத்தை என்ட் கார்டு போட்டு நிறுத்த 356 சட்டப்பிரிவு பாயுமா? இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: