டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்

டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குருகிராம், காசியாபாத் மற்றும் நொய்டா நகரங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், கடும் நீர்த்தேக்கம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: