ஜெயங்கொண்டம், ஜூலை 9: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் எஸ்ஐ தங்கமணி மற்றும் போலீசார் ஜெயங்கொண்டம் புதுக்குடி வாரியங்காவல் பகுதிகளில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது வாரியங்காவல் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகப்படும்படி பையுடன் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து பரிசோதனை செய்ததில் பையில் கஞ்சா வைத்து விற்றது தெரியவந்தது. மேலும், விசாரணையில் அவர் வாரியங்காவல் கிராமம் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த மாயவேல் (44) என்பது தெரியவந்தது.இதையடுத்து மாயவேலை கைது செய்து, அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
