பெரம்பலூரில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள்

 

பெரம்பலூர், ஜூலை 8: பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத்துறை மண்டலக் கலை பண்பாட்டு மையம் திருச்சிராப்பள்ளி சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக பெரம்பலூரில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் ஆர்வமுடன் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: கலை பண்பாட்டுத் துறையின் திருச்சிராப்பள்ளி மண்டலம் சார்பாக, பெரம்பலூர் சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம்) வருகிற 11ம் தேதி காலை 9 மணி முதல் பெரம்பலூர் மதன கோபாலபுரம், நான்காவது குறுக்குத் தெருவிலுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடத்திவுடம், இக்கலை போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. மேலும் இப்போட்டிகளில் 09-12, 13-19 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப் படுவார்கள். பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம்.

முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசைப்பாடல்களுக்கான திரைபட நடனங்கள் நீங்களாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. பக்க வாத்தியங்களையோ ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதிக பட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும். தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் (நாட்டுப்புற கலை) ஆடலாம். முழு ஒப்பணை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும்.

திரைப் படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசைப் பாடல்களுக்கான திரைபட நடனங்கள் நீங்களாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழுநடனங்கள் அனுமதி இல்லை. பக்க வாத்தியங்களையோ ஒலி நாடாக்களையோ பயன் படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் அதிக பட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும். குரலிசை போட்டிக்கு, கர்நாடக இசை தேசியபாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ் பாடல்கள் மட்டுமே பாடவேண்டும். பக்கவாத்திய கருவிகளை பாடுபவர்கள் மட்டும்பயன் படுத்திகொள்ளலாம்.

மேற்கத்திய இசை திரைஇசை பாடல்கள், குழுபாடல்கள் அனுமதிஇல்லை. அதிக பட்சம் 5 நிமிடங்கள் பாடலாம் ஒலி பதிவினை பயன்படுத்தக் கூடாது. ஓவியப்போட்டிக்கு இந்தத் துறையால் வழங்கப் படும் ஓவியத்தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயின்டிங் என எவ்வகையிலும் ஒவியங்கள் அமையலாம். ஓவியத்தால் வண்ணங்கள் தூரிகைகள் உள்பட்ட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதி இல்லை. ஒவ்வொரு வயது பிரிவுக்கும் தனித் தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். கடந்த ஆண்டுகளில் இப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

மேலும், இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் மாவட்ட அரசு இசைப்பள்ளி, நான்காவது குறுக்குத் தெரு, மதனக் கோபாலபுரம், பெரம்பலூர் என்ற இடத்தில் வருகிற 11ஆம்தெதி காலை 9 மணிக்கு வருகைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை (9659507773) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: