இந்தோனேசியாவில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிராம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

ஜகார்த்தா: பிரதமர் மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில் முதல்கட்டமாக கடந்த 6ம் தேதி இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி யோக்யகர்த்தாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிராம்பனன் கோயிலுக்கு நேற்று சென்று வழிபாட்டார். அவருடன் இந்தோனேசிய அதிபர் பிரபாவோவும் சென்றிருந்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, “சிவபெருமானுடன் தொடர்பு கொள்ள எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிட்டுவது எனக்கு கிடைத்த பெரும்பேறு. நான் கேட்கும் உரையாடல்களில் இங்கு வீசும் காற்றின் மணம் வீசுவதை உணர்கிறேன். அந்த மணம், இந்தியாவின் மண்ணில் ஒவ்வொரு கணமும் நாம் உணரும் அதே மணம்.

இந்த மணம், இந்த கலாச்சார மரபு இந்தியாவையும், இந்தோனேசியாவையும் ஒன்றிணைக்கிறது. இந்த பிராம்பனன் கோயில் இந்தியா, இந்தோனேசியாவின் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தின் காலத்தால் அழிக்க முடியாத அடையாளமாக உள்ளது” என்றார். இதைத்தொடர்ந்து 3 நாள் இந்தோனேசிய பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார்.

Related Stories: