சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக ‘திராவிடமணி’ இரட்டைமலை சீனிவாசன் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது; “நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என திராவிடமாடல் ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
