ஈரானில் கமேனியின் இறுதிச்சடங்கு: மகன் மொஜ்தபா கமேனி பங்கேற்கவில்லை

தெஹ்ரான்: இஸ்ரேலின் கொலை அச்சுறுத்தல் மற்றும் உளவு பார்க்கும் அபாயம் காரணமாக, தனது தந்தை அலி கமேனியின் இறுதிச்சடங்கில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இன்று தொடங்கி கமேனியின் இறுதிச்சடங்குகள் பல நாட்களுக்கு நடைபெறும். அவரது உடல் ஈரான் மற்றும் அண்டை நாடான ஈராக்கில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டும். தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லா பகுதியில் இறுதிச்சடங்குகள் தொடங்கும்.

இதற்கிடையே, ஈரானின் புதிய உச்சத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவரது மகன் மொஜ்தபா கமேனி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றார். அவருக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவர் தந்தை அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: