உக்ரைன் மீது தாக்குதல்; 21 பேர் பலி: ரஷ்யா அதிரடி

கீவ்: உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா டிரோன்கள், ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 21 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். ரஷ்யாவின் ராணுவ தளங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உ்ளளது.

கீவ் மீது நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பாலிஸ்டிக், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலமாக ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களால் நகரம் முழுவதும் சுமார் 28 இடங்களில் குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. ரஷ்யாவின் தாக்குதலில் 21பேர் கொல்லப்பட்டனர்.

* ரஷ்யாவுக்கு, இந்தியா பெட்ரோல் சப்ளை
உக்ரைன், டிரோன் மூலம் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் தற்போது ரஷ்யாவில் கடுமையாக பெட்ரோல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக சுமார் 60 ஆயிரம் பெட்ரோல் டன் முதல் 60 ஆயிரம் மெட்ரிக் டன் வரையிலான பெட்ரோல் சரக்கு கப்பலில் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: