வெனிசுலா பூகம்ப பலி 2,295 ஆக உயர்வு; இடிபாடுகளில் சிக்கியிருந்த பாதுகாவலர் 8 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

கராகஸ்: வெனிசுலாவில் நடந்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்க இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் சிக்கித் தவித்த பாதுகாப்பு காவலர் ஒருவர் வியக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் கடந்த ஜூன் 24ம் தேதி 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் நடந்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், கடியா லா மார் பகுதியில் இடிந்து விழுந்த 7 அடுக்கு மாடி கட்டிட இடிபாடுகளுக்குள் 8 நாட்கள் உயிருடன் போராடிய ஹெர்னான் கில் (43) என்ற பாதுகாப்பு காவலர் வியக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மனைவி குஸ்பிமார் கோன்சலஸ் கூறுகையில், ‘இது உண்மையிலேயே ஒரு பெரிய அதிசயம்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்த பேரிடரில் இதுவரை 2,295 பேர் உயிரிழந்துள்ளதும், 11,267 பேர் காயமடைந்துள்ளதும், சுமார் 50,000 பேர் காணாமல் போயுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 60,000 கட்டிடங்கள் சேதமடைந்து 13,000 பேர் வீடற்றவர்களாக தவித்து வருகின்றனர். சர்வதேச நாடுகளின் உதவியுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

Related Stories: