தவெக அரசின் அலட்சியத்தால் விழிப்புணர்வு இல்லாமல் வெறிச்சோடிய போலியோ சொட்டு மருந்து முகாம்கள்: ஒரு சில இடங்களில் செவிலியர்கள் இல்லாமல் பேனர் வைத்திருந்த அவலம்

 

திருவள்ளூர்: தவெக அரசின் அலட்சியத்தால் விழிப்புணர்வு இல்லாமல் வெறிச்சோடிய போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒரு சில இடங்களில் செவிலியர்கள் இல்லாமல் பேனர் வைத்திருந்த அவலம் ஏற்பட்டது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 1493 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய அலுவலகங்கள், அரசு பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் முகாம்கள் அமைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவது வழக்கம்.

இந்த பணிகளுக்காக பல்வேறு சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வளர்கள் என மொத்தம் 6127 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். போலியோ சொட்டு மருந்து முகாம் என்று அரசு சார்பில் விளம்பரப்படுத்தப்படுத்தி அதன்மூலம் பொதுமக்கள் ஆர்வமுடன் முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட்டுக் கொண்டு செல்வது வழக்கம். ஆனால் திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் வெறிச்சோடியே காணப்பட்டது. ஒரு சில இடங்களில் செவிலியர்களும் இல்லாத நிலையும் இருந்தது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகாம்கள் நடப்பது எதுவும் தெரியாமல் சாலையில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிலையே அதிக அளவில் காணப்பட்டது. மாவட்ட தலைநகரிலேயே போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் மாவட்டம் முழுவதும் இதே நிலை தான் என்பதால் தவெக அரசின் நிர்வாகத் திறன் இல்லாத காரணத்தினால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தவெக அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

Related Stories: