சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், நடப்பு கல்வி ஆண்டிற்கான கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. அரசு கல்லூரிகளுக்கு 20% கூடுதல் இடங்களுக்கும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு 15% கூடுதல் இடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
