×

காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே இஸ்ரேல் குறிவைத்துக் கொன்று வருவதாக ஐநா விசாரணை ஆணையம் பரபரப்பு அறிக்கை

 

லண்டன்: காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே இஸ்ரேல் குறிவைத்துக் கொன்று வருவதாக ஐநா விசாரணை ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 2023 அக்.7 முதல் காசாவில் இஸ்ரேல் திட்டமிட்டு நடத்தி வரும் தாக்குதல்களில் 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 44,000 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குழந்தைகள் மீதான சித்திரவதைகள், செயற்கையான பட்டினிச் சாவுகள், மகப்பேறு, கல்வி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீனர்களின் எதிர்காலத்தையும் சுயநிர்ணய உரிமையையும் இஸ்ரேல் திட்டமிட்டு சிதைத்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : UN Commission of Inquiry ,Israel ,Gaza ,London ,
× RELATED இருதரப்பு வர்த்தக அளவை...