×

ஈரான் போர் தொடர்பாக அதிபர் டிரம்புக்கு எதிராக செனட் சபையில் தீர்மானம்: முதல் முறையாக நிறைவேறியது

வாஷிங்டன்: ஈரான் போர் தொடர்பாக அதிபர் டிரம்புக்கு எதிரான தீர்மானம் செனட் சபையில் முதல் முறையாக நிறைவேறி உள்ளது. ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர அல்லது மேலும் தொடர்வதற்கு முன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அதிபர் டிரம்பிற்கு உத்தரவிடும் போர் அதிகார தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நடந்தது.

இந்த வாக்கெடுப்பு 50-48 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன், செனட் சபையில் 9 முறை இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு தோல்வி அடைந்த நிலையில், இம்முறை ஆளும் கட்சியை சேர்ந்த 4 குடியரசு கட்சியினர் ஆதரவாக வாக்களித்துள்ளதால் தீர்மானம் முதல் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் கடந்த மாத தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு சட்ட வலிமை இல்லாததால் தேவையற்றது என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். ஆனாலும் இது ஈரான் போர் மற்றும் அதை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் செய்து கொண்ட ஒப்பந்தம் ஆகிய இரண்டின் மீதும் அதிகரித்து வரும் கவலைகளை பிரதிபலிக்கிறது. மேலும், ஈரான் போர் இழப்பீடுகளை ஈடு செய்ய பென்டகன் 80 பில்லியன் டாலர் நிதியை கோரும் சமயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது டிரம்புக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Senate ,President Trump ,Iran ,Washington ,Iran… ,
× RELATED காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே...