பெர்லின்: ஜெர்மனியில் ரயில்வே நெட்வொர்க்கில் தகவல் தொடர்புகளுக்கு பயன்படுத்தப்படும் ஜிஎஸ்எம்-ஆர் டிஜிட்டல் தகவல் தொடர்பு அமைப்பில் நாடு தழுவிய அளவில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அனைத்து ரயில்களும் ரயில் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் ரயில் சேவை நிறுவனமான டாய்ச் பான் நிறுவனம் தனது இணையதளத்தில் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரயில்வே நெட்வொர்க்கில் உள்-தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் ஜிஎஸ்எம்-ஆர் அமைப்பில் நாடு தழுவிய அளவில் சிக்கில் ஏற்பட்டது. காரணம் கண்டறியப்பட்டது.
அவசரகால அமைப்பை பயன்படுத்தி நிலைமையை சீராக்க முடிந்தது. சிக்கல் சரிசெய்யப்பட்டுவிட்டது. சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் நாடு முழுவதும் ரயில்நிலையங்கள் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சேவை முடக்கத்தின்போது பயணிகள் அமர்ந்திருக்க ஏதுவாக ரயில்களை திறந்து வைப்பதாக டாய்ச் பான் நிறுவனம் தெரிவித்தது.
