×

கிரிமியாவின் ரயில்வே பாலம் மீது குண்டுவீச்சு: உக்ரைன் தாக்குதல்

கீவ்: கிரிமியாவின் முக்கியமான ரயில்வே பாலம் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.  உக்ரைன் ரஷ்யா இடையே நீடித்து வரும் 4 ஆண்டு போரின் சமீபத்திய கட்டத்தில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கிரிமியா தீபகற்பத்தை தனிமைப்படுத்தும் நோக்கில் ரயில்வே பாலத்தை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் மின்நிலையம் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்பு இலக்குகளையும் உக்ரைன் ராணுவம் தாக்கியுள்ளன.

உக்ரைன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதால் ரஷ்ய அதிகாரிகள் பொதுமக்களுக்கு பெட்ரோல் விற்பனையை நிறுத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மைக்கலோ பெடோரோவ் கடந்த வாரம், உக்ரைன் படைகள் டிரோன்கள் மூலமாக கிரிமியாவை தனிமைப்படுத்தி வருகின்றன. மிக விரைவில் கிரிமியா ஒரு தீவாக மாறும் என்று தெரிகிறது. இது ரஷ்யர்களுக்கு மிகவும் எதிர்பாராத சில விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Crimea ,Ukraine ,Kiev ,Russia ,Crimean peninsula ,
× RELATED காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே...