×

இருதரப்பு வர்த்தக அளவை அதிகரிப்பதற்காக இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகின்றன

மாஸ்கோ: இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தக அளவை உயர்த்தும் நோக்கத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட்டுவருவதாக ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் மாஸ்கோவில் 12வது பிரிமாகோவ் ரீடிங்ஸ் சர்வதேச கல்வி மற்றும் நிபுணர் மன்றக் கூட்டத்தில் அரசின் செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பெஸ்கோவ், ‘‘வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த ரஷ்யாவும் இந்தியாவும் செயல்பட்டுவருகின்றன. வர்த்தக அளவு சீரான வளர்ச்சிப் பாதையில் செல்வதைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதே பாதையில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். பல்வேறு சர்வதேச அமைப்புக்களில் நாங்கள் இணைந்து பங்கேற்பதன் மூலம் எங்கள் உறவு மேலும் வலுப்படுத்தப்படுகின்றது.

இந்த கூட்டாண்மையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். மேலும் எங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், புதிய வாய்ப்புகளை இணைந்து கண்டறியவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். தற்போது 60பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள இருதரப்பு வர்த்தக அளவை 2030ம் ஆண்டிற்குள் 100பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை நோக்கி இரு நாடுகளும் செயல்பட்டு வருகின்றன” என்றார்.

Tags : India ,Russia ,MOSCOW ,Peskov ,12th ,Primakov Readings International Education and Expert Forum meeting ,Moscow, Russia ,
× RELATED இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்