- இந்தியா
- ரஷ்யா
- மாஸ்கோ
- தலைமை நீதிபதி
- இந்திய உச்ச நீதிமன்றம்
- சூர்யகாந்த்
- உச்ச நீதிமன்றம்
- இரஷ்ய கூட்டமைப்பு
- இகோர் கிராஸ்னோவ்
- மார்பிள் ஹால்
மாஸ்கோ: இந்திய உச்ச நீதிமன்ற பிரதிநிதிகள் குழுவுடன் மாஸ்கோ சென்றுள்ள இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், ரஷ்ய கூட்டமைப்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இகோர் கிரஸ்னோவ்வை நேற்று மாஸ்கோவில் உள்ள மார்பிள் ஹாலில் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து வௌியிடப்பட்ட அறிக்கையில், “வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள பரஸ்பர ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும், நீதி வழங்கும் முறையை மேம்படுத்தவும், நீதியை எளிதில் அணுகுவதை உறுதி செய்யவும், நீதிமன்ற நடைமுறைகளில் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறியை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட இருநாடுகளின் நீதித்துறைகளும் மேற்கொண்ட டிஜிட்டல் மாற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடந்தன.
உயர்தரம் வாய்ந்த நீதித்துறை சார்ந்த கல்வியின் முக்கியத்துவங்கள் பற்றியும் அப்போது சுருக்கமாக விவாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளின் தலைமை நீதிபதிகள் மற்றும் அவர்களது குழுவினரின் பரஸ்பர வருகைகள், குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சி திட்டங்கள் மற்றும் கூட்டு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு தரப்பினரின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
