×

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்

பீஜிங்: பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியிடம், ‘‘இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்தை செயல்படுத்தவும், உணர்திறன் மிக்க விவகாரங்களை சரியாக கையாளவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது’’ என கூறியதாக சீன அரசுக்கு சொந்தமான சின்ஹுவா செய்தி நிறுவனம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

Tags : China ,India ,BEIJING ,Foreign Minister ,Wang Yi ,Delhi ,BRICS ,Modi ,
× RELATED காசா மீதான போரின்போது 20,179 பாலஸ்தீன...