நாகப்பட்டினம், ஜூன் 23: வேளாங்கண்ணி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணாவுக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் விழுந்தமாவடி அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (29), தலைஞாயிறு அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன்(30) ஆகியோர் அபபகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ புகையிலை பொருட்களை பரிமுதல் செய்தனர்.
