புதுடெல்லி: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தாண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு வரும் செப்டம்பரில் நடக்க உள்ளது. இதையொட்டி, பிரிக்ஸ் பாதுகாப்பு மாநாடு இந்தியா நடத்துகிறது. இம்மாநாடு டெல்லியில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்க உள்ளது. மேற்காசியா, ரஷ்யா-உக்ரைன் உள்ளிட்ட போர் பதற்றங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிக்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செர்ஜி ஷோய்கு, ஈரான் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளர் நெசாமிபூர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை தாங்க உள்ளார்.
போர் பதற்றங்களுக்கு மத்தியில் பிரிக்ஸ் பாதுகாப்பு மாநாடு டெல்லியில் இன்று துவக்கம்
- பிரிக்ஸ் பாதுகாப்பு உச்சிமாநாடு
- தில்லி
- புது தில்லி
- இந்தியா
- பிரிக்
- பிரேசில்
- ரஷ்யா
- சீனா
- தென் ஆப்பிரிக்கா
- ஈரான்
- ஐக்கிய அரபு நாடுகள்
- எகிப்து
- பிரிக்ஸ் உச்சி மாநாடு
