மாதவரம் மேம்பாலத்தில் மணல் குவியல்கள் அகற்றம்

மாதவரம்: மாதவரம் மேம்பாலத்தில் மணல் குவியல்கள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு சிரமின்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்ைன நகரில் சாலையில் குவிந்துகிடக்கும் மணல், கற்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டார். இதையடுத்து மண்டல அதிகாரிகளை தீவிர நடவடிக்கை எடுத்து மணல் குவியல்கள், கற்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதன்படி, மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் பகுதியில் குவிந்துள்ள மணல்களை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். மேம்பாலத்தின் கைப்பிடி சுவர்களில் படிந்திருந்த ஆயில் படிவத்தையும் தண்ணீரை அடித்து அகற்றி சுத்தப்படுத்தினர்.

Related Stories: