ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி சமையல் கூடத்தில் தீ விபத்து

 

ஊத்தங்கரை, ஜூன் 19: ஊத்தங்கரை அடுத்த கருமாண்டபதி ஊராட்சியில் உள்ள பெரியார் கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 26 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை, பள்ளி வழக்கம் போல் திறக்கப்பட்டு செயல்பட்டது. சிறிது நேரத்தில் பள்ளியின் சமையல் அறையில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து ஆசிரியர் துரிதமாக செயல்பட்டு, மாணவர்கள் அனைவரையும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து‌ சென்றனர். இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: